சூர்யாவின் வயது... ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஸ்பெஷல்

சூர்யாவின் வயது... ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஸ்பெஷல்
Updated on
1 min read

கடந்த 2024-இல் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ படத்தை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்கத் தயாராக இல்லை. ‘அதன் இரண்டாம் பாகத்தை ‘எப்போது எடுப்பீர்கள்?’ என்று நச்சரிக்க, அதை எழுதி, இயக்கிய வெங்கி அட்லூரி ‘இன்னும் 2 வருடம் காத்திருங்கள்’ என்று சொல்லிவிட்டார்.

தற்போது சூர்யாவை வைத்து அவர் எடுத்திருக்கும் மற்றொரு குடும்பத் த்ரில்லரான ‘விஸ்வநாத் & சன்ஸ்' படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

‘லக்கி பாஸ்க’ரில் எப்படி துல்கர் சல்மபனின் நடிப்புக்குத் தீனி போட்டாரோ, அதைவிட அதிகமாக, சூர்யாவுக்கு நடிப்புடன் ஆக்‌ஷன் தீனியும் போட்டிருப்பார் என்பது கூடுதல் எதிர்பார்ப்பு.

மொழி கடந்து வரவேற்பைப் பெற்றுவிட்ட தெலுங்கு இயக்குநர்களின் வரிசையில் வரும் வெங்கி அட்லூரியுடன் இதில் கூட்டணி அமைத்திருக்கும் இன்னொரு பிரபலம் ஜி.வி.பிரகாஷ்குமார்.

ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள ‘பட்டாம்பூச்சி', ‘தி வெட்டிங் சாங்' பாடல்களுடன் தற்போது ‘தி ஒன் ரூல்' என்கிற மூன்றாவது பாடலையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

முதல் இரண்டு பாடல்களும் சூர்யா - மமிதா பைஜு ஜோடியின் காதல், திருமணக் கொண்டாட்டத்தைக் காட்சிப்படுத்த, ‘தி ஒன் ரூல்’ பாடலோ சூர்யா ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் ஆக்‌ஷன் பரிமாணத்தை அதிரடியான தாளக்கட்டில் தெறிக்கவிட்டிருக்கிறது.

சூர்யா - மமிதா பைஜு ஜோடியின் ‘ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி’யைப் பாராட்டும் இணையவாசிகள், ‘சூர்யாவுக்கு வயசே ஆகாதா? மனுஷன் அவ்வளவு ஃபிட் அண்ட் ஸ்மார்ட்!’ என்று புகழ்கிறார்கள்.

அடுத்த வெள்ளியன்று திரையரங்குகளில் சூர்யாவின் இந்தப் படத்துடன் மோதவிருக்கிறது விஷாலின் ‘மகுடம்’. இது விஷாலே இயக்கியிருக்கும் படம்!

சூர்யாவின் வயது... ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஸ்பெஷல்
சுவாசிகா: தேடப்படும் நடிகை! | ஜெயித்த கதை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in