

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
துப்பாக்கி சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாதன் வாழ்வில், அவரது மகன் காரணமாக நுழையும் இளம்பெண்ணால் வரும் உணர்வுபூர்வமான மாற்றங்களை வேகமாக 2.49 நிமிடங்களில் அடுக்கி சொல்கிறது ட்ரெய்லர்.
விளையாட்டு வீரராக, பொறுப்பான அப்பாவாக சூர்யாவின் கம்பீரம் வசீகரிக்க, அவரின் அனுபவத்துடன் போட்டி போட்டு ஈர்க்கிறது மமிதா பைஜுவின் குறும்பு நடிப்பு.
கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் சென்டிமெண்ட் என குடும்ப பாங்கான சூர்யாவை விரும்பும் ரசிகர்களுக்கு படம் நிச்சயம் விருந்து படைக்கும் என்பதற்கு இந்த ட்ரெய்லர் உத்தரவாதம் தருகிறது.
படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மூன்று நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் மாறும் உணர்வுகளை சரியாக கடத்தி காட்சிகளுக்கு அழகு சேர்க்கிறது ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை.
‘கருப்பு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் வெளியாக இருக்கும் இப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.