விஷாலின் ‘புருஷன்’ படப்பிடிப்பு தொடக்கம்

விஷாலின் ‘புருஷன்’ படப்பிடிப்பு தொடக்கம்
Updated on
1 min read

விஷால் – சுந்தர்.சி கூட்டணியின் ‘புருஷன்’ படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

விஷால் இயக்கி வரும் ‘மகுடம்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘புருஷன்’ படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியிருக்கிறார் விஷால். இதனை பென்ஸ் மீடியா மற்றும் அவ்னி சினி மேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

இதில் விஷாலுடன் தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது படக்குழு. முழுக்க காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக இது உருவாக இருக்கிறது.

’புருஷன்’ படத்தின் அறிமுக வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன் காட்சியமைப்புகளுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் ஒளிப்பதிவாளராக கோபி அமர்நாத், இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

விஷாலின் ‘புருஷன்’ படப்பிடிப்பு தொடக்கம்
தயாரிப்பாளராகவும் களமிறங்கும் பிரதீப் ரங்கநாதன்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in