தயாரிப்பாளராகவும் களமிறங்கும் பிரதீப் ரங்கநாதன்!

தயாரிப்பாளராகவும் களமிறங்கும் பிரதீப் ரங்கநாதன்!
Updated on
1 min read

இயக்குநர், நடிகரைத் தொடங்கி தயாரிப்பாளராகவும் மாறவுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

முன்னணி இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். தொடர்ச்சியாக வெற்றிப் பாதையில் இருப்பதால், இவரது கால்ஷீட் தேதிகளுக்காக பல்வேறு தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், தயாரிப்பாளராகவும் களமிறங்க பிரதீப் ரங்கநாதன் முடிவு செய்திருக்கிறார்.

அவருடைய கதையினை, அவரது உதவி இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளார். நாயகியை மையப்படுத்திய இக்கதையில் மமிதா பைஜு நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக படத்தினை முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் யாருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் தான் இயக்கி நடிக்கவிருந்த படத்தினை, 6 மாத காலத்துக்கு ஒத்திவைத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

தயாரிப்பாளராகவும் களமிறங்கும் பிரதீப் ரங்கநாதன்!
‘ராஜா சாப்’ தோல்வி: தயாரிப்பாளருக்கு கைகொடுக்கும் பிரபாஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in