

விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘பத்தா’ திரைப்படம் வரும் அக்டோபர் முதல் தேதி வெளியாகிறது.
ஸ்டார் ஸ்டுடியோ 18 - இயக்குநர் அட்லியின் ‘ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், ஒரு தந்தை - மகள் இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கிறது.
தற்போது இளையோர் உலகம் கொண்டாடிவரும் சாய் அபயங்கர் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். பட வெளியீடு நெருங்கி வரும் நிலையில் படத்தில் இடம்பெறும் ‘மகளே..’ என்கிற பாடலை முதல் சிங்கிளாக தற்போது வெளியிட்டிருக்கிறார்கள்.
பாடலை சாய் அபயங்கரே பாடியிருக்கிறார். கார்த்திக் நேத்தா இதனை எழுதியிருக்கிறார். படத்தின் கதை எண்பதுகளில் நடப்பதால், இப்பாடல் உருவான விதத்தையும் 80களில் ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பாடல் பதிவு செய்யப்படுவதுபோல் இசைக் காணொளியாக வெளியிட்டிருக்கிறார்கள்.
தற்போது 80களின் நினைவுகளைக் கொண்டாடும் ஒளிப்படங்கள், காணொளிகளை ஏஐ மூலம் உருவாக்கி வெளியிட்டு இணையத்தில் ‘டிரெண்ட்’ அலப்பறை செய்துவரும் நெட்டிசன்கள் சற்றும் எதிர்பாராத வகையில் ‘மகளே’ பாடலின் மேக்கிங் வீடியோ அமைந்துள்ளது