தந்தை - மகள் அன்பை பேசும் ‘அப்பா குட்டி’

தந்தை - மகள் அன்பை பேசும்  ‘அப்பா குட்டி’
Updated on
1 min read

விஜய் ஆண்டனி ஹீரோ​வாக நடிக்​கும் படம், ‘அப்பா குட்​டி’. இதில் பிரீத்தி அஸ்​ராணி, பேபி லிதன்​யா, பகவதி பெரு​மாள், ஹரிப்​பிரி​யா, அருவி மதன், சித்ரா லட்​சுமணன், உள்​ளிட்ட பலர் முக்​கியக் கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். ‘இர​வுக்கு ஆயிரம் கண்​கள்’, ‘கண்ணை நம்​பாதே’, ‘பிளாக்​மெ​யில்’ படங்​களை இயக்​கிய மு.​மாறன் இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு ராஜீவ் ரவீந்​திரன் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

தந்​தை - மகளுக்கு இடையே உள்ள நிபந்​தனையற்ற அன்​பு, தியாகம் மற்​றும் பிணைப்பை மைய​மாகக் கொண்டு இந்​தப்​படம் உரு​வாக்​கப் பட்​டுள்​ளது. இந்​நிலை​யில் இப்​படத்​தின் 2-வது தோற்​றத்​தைப் படக்​குழு வெளி​யிட்​டுள்​ளனர். “உணர்​வுப்பூர்​வ​மான தருணங்​கள், அதிரடிக் காட்​சிகள் மற்​றும் ஆழமான கதைகூறல் என ஒட்​டுமொத்த குடும்​பத்​தினருக்​கு​மான சிறந்த திரையரங்​க அனுபவத்​தை இந்​தப்​ படம்​ தரும்​” என்​கிறது படக்​குழு.

தந்தை - மகள் அன்பை பேசும்  ‘அப்பா குட்டி’
கிறிஸ்டோபர் நோலன்: மனசாட்சியை உலுக்கும் கலைஞன் | படைப்புலகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in