பால்கி இயக்கும் தமிழ் படத்தில் வித்யா பாலன்

பால்கி இயக்கும் தமிழ் படத்தில் வித்யா பாலன்
Updated on: 
1 min read

இந்தி நடிகை​யான வித்யா பாலன், தமிழில் ‘நேர்​கொண்ட பார்​வை’ படத்​தில் நடித்​திருந்​தார். இப்​போது ‘ஜெ​யிலர் 2’ படத்​தில் நடித்து வரு​கிறார். இதையடுத்து அவர் ஆர்​.​பால்கி இயக்​கும் தமிழ்ப் படத்​தில் நாயகி​யாக நடிக்​கிறார். சுமார் 17 ஆண்​டு​களுக்​குப் பிறகு பால்​கி​யுடன் அவர் மீண்​டும் இணைந்​துள்​ளார்.

முன்​ன​தாக கடந்த 2009-ம் ஆண்டு வெளி​யான ‘பா’ படத்​தில் இரு​வரும் பணி​யாற்றி இருந்​தனர். இந்​தப் புதிய படத்​தின் படப்​பிடிப்பு தொடங்​கி​யுள்​ள​தாகப் புகைப்​படத்​துடன் வித்யா பாலன் தெரி​வித்​துள்​ளார். இப்​படத்​துக்கு இளை​ய​ராஜா இசை அமைக்​கிறார். இது ஒரு பாடகி​யின் பயோபிக் என்று தெரி​கிறது.

பால்கி இயக்கும் தமிழ் படத்தில் வித்யா பாலன்
Belonging: நான் ‘நான்’ ஆக இருக்க இடம் இருக்கிறதா? | டீனதிகாரம் 4
பால்கி இயக்கும் தமிழ் படத்தில் வித்யா பாலன்
‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு நிறைவு - படக்குழு அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in