‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு நிறைவு - படக்குழு அறிவிப்பு

‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு நிறைவு - படக்குழு அறிவிப்பு
Updated on: 
1 min read

சென்னை: கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'மரகத நாணயம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் வெளியான முதல் பாகம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெற்றிப் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, 9 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியுள்ள இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பேஷன் ஸ்டுடியோஸ், டங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. முதல் பாகத்தில் நடித்த ஆதி, நிக்கி கல்ராணி, முனீஷ்காந்த், ஆனந்த்ராஜ், டேனியல் ஆனி போப், அருண்ராஜா காமராஜ், முருகானந்தம் ஆகியோருடன், இம்முறை சத்யராஜ் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். தீபக் மேனன் மற்றும் பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்ய, திருமலை ராஜன் எடிட்டிங் பணிகளையும், ராஜேஷ் கண்ணன் வசனங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

இறுதிகட்ட பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், பாடல்கள், ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு நிறைவு - படக்குழு அறிவிப்பு
‘அன்பில் அவன்’ மொத்த ஆல்பமும் ஹிட்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in