‘ரேவன்’ படத்துக்காக கிராபிக்ஸில் உருவான காகம்!

‘ரேவன்’ படத்துக்காக கிராபிக்ஸில் உருவான காகம்!
Updated on: 
1 min read

கருணாஸ், வெற்றி முதன்​மைக் கதா​பாத்​திரங்​களில் நடிக்​கும் திரைப்​படம், ‘ரேவன்’. இதில் வாணி போஜன், அனு​மோள், ரவீணா, விஷ்வ​மித்​ரன், ‘ராட்​சசன்’ வினோத் சாகர், சரவணன் ஷக்​கி, சுபத்ரா உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர்.

சேது​ராஜன் ராஜகோ​பால் மற்​றும் ஆர்​.​வி.சரண் ஆகியோர் ஒளிப்​ப​தி​வாளர்​களாகப் பணி​யாற்​றுகின்​றனர். வே. வெற்​றிவேல் சந்​திரசேகர் இப்​படத்​தின் மூலம் இயக்​குந​ராக அறி​முக​மாகிறார்.

பொன்ஃ​போர்ட் கிரியேட்​டிவ் சொலுஷன்ஸ் பிரைவேட் சார்​பில் செல்​ல​ முத்து குப்​பு​சாமி தயாரிக்​கும் இப்​படம் பற்​றி, வெற்​றிவேல் சந்​திரசேகர் கூறும்​போது, ‘‘இது க்ரைம் த்ரில்​லர் திரைப்​படம். நந்​தன் ஸ்ரீதரன் எழு​திய ‘படு​களக் காதை’ நாவலைத் தழுவி இப்​படத்​துக்​கான கதையை உரு​வாக்கி இருக்​கிறேன்.

சில ஆண்​டு​களுக்கு முன்பு தமிழ்​நாட்​டில் சுமார் 30 கொலை மற்​றும் பாலியல் வன்​கொடுமை வழக்​கு​களு​டன் தொடர்​புடைய​தாகக் கூறப்​பட்ட ஒரு தொடர் கொலை​யாளி கைது செய்​யப்​பட்ட உண்​மைச் சம்​பவத்​தின் தாக்​க​மும் இந்​தத் திரைக்​கதை​யில் முக்​கியப் பங்கு வகித்​துள்​ளது. அந்த உண்​மைச் சம்​பவத்தை அப்​படியே பதிவு செய்​யாமல், அதன் தாக்​கத்​தில் விறு​விறுப்​பான க்ரைம் த்ரில்​லர் திரைக்​கதையை உரு​வாக்​கி​யிருக்​கிறோம்.

இப்​படத்​தில் காக்​கைக்​கும் முக்​கியப் பங்கு இருக்​கிறது. காகத்தை நமது முன்​னோர்​களின் வடிவ​மாகப் பார்க்​கும் நம்​பிக்கை நமது பண்​பாட்​டில் நீண்​ட​கால​மாக இருந்து வரு​கிறது. அந்த நம்​பிக்​கைக்​கும் இந்​தப் படத்​தின் கதைக்​கும் முக்​கிய​மான தொடர்பு இருக்​கிறது. படத்​துக்​காக கம்ப்​யூட்​டர் கிராபிக்ஸ் உதவி​யுடன் காக்​கை​யைத் தத்​ரூப​மாக உரு​வாக்​கி, பயன்​படுத்​துகிறோம்” என்​றார்.

‘ரேவன்’ படத்துக்காக கிராபிக்ஸில் உருவான காகம்!
திருநங்கைகள் குறித்த சர்ச்சை பேச்சு: மோகன் ஜி-க்கு கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in