அமெரிக்க பாடகி​யுடன் தீ பாடிய ‘வாரி வாரி’ ரீமிக்ஸ் வெளி​யீடு

அமெரிக்க பாடகி​யுடன் தீ பாடிய ‘வாரி வாரி’ ரீமிக்ஸ் வெளி​யீடு
Updated on
1 min read

சுயாதீன பாடல்​கள் மூலம் சர்​வ​தேச அளவில் கவனம் பெற்​றுள்ள தமிழ் பாடகி தீ, அமெரிக்​கப் பாப் பாடகி​யும் கட்ஸீ என்ற பெண்கள் இசைக்​குழு​வைச் சேர்ந்​தவரு​மான லாரா ராஜுடன் இணைந்து ‘வாரி வாரி’ என்ற தமிழ் சுயாதீனப் பாடலின் ரீமிக்ஸ் பதிப்பை வெளி​யிட்​டுள்​ளார்.

சந்​தோஷ் நாராயணன் இசையமைத்​துத் தயாரித்த பாடலான ‘வாரி வாரி’ ஏற்​கெனவே வரவேற்​பைப் பெற்று வரும் நிலை​யில் இப்​போது இப்​பாடலின் ரீமிக்ஸை வெளி​யிட்​டுள்​ளனர். இந்​தப் பாடலுக்கு கிருஷ்ணா இணை தயாரிப்​பாள​ராகப் பணியாற்றியுள்​ளார்.

சர்​வ​தேச இசைக் கலைஞர்​களான தீ, லாரா ராஜ் ஆகியோரின் கூட்​ட​ணி​யில் உரு​வாகி இருக்​கும் இந்த ரீமிக்ஸ் பாடல் உலகளாவிய இசை ரசிகர்​களின் விருப்​பப் பாடல் பட்​டியலில் இடம் பிடித்​துள்​ளது.

அமெரிக்க பாடகி​யுடன் தீ பாடிய ‘வாரி வாரி’ ரீமிக்ஸ் வெளி​யீடு
ஸ்ருதி ஹாசனின் டீப்ஃபேக் வீடியோ, புகைப்படங்​களை நீக்க நீதி​மன்​றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in