ஸ்ருதி ஹாசனின் டீப்ஃபேக் வீடியோ, புகைப்படங்​களை நீக்க நீதி​மன்​றம் உத்தரவு

நடிகை ஸ்ரு​தி ஹாசன்

நடிகை ஸ்ரு​தி ஹாசன்

Updated on
1 min read

திரை பிரபலங்​கள் தங்​கள் ஆளுமை உரிமை​களைப் பாதுகாக்கக்கோரி வழக்​குத்​தொடுத்து வரு​கின்​றனர். முன்​னணி நடிகர்​கள் பலர் வழக்​குத் தொடுத்து தடை​யுத்​தரவு பெற்​றுள்ள நிலை​யில், நடிகை ஸ்ரு​திஹாசனும் தனது ஆளுமை உரிமைகளை பாதுகாக்கக் கோரி மும்பை உயர் ​நீ​தி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்திருந்தார்.

தனது அனு​மதி இன்​றி, செயற்கை நுண்​ணறிவு மற்​றும் டீப்ஃபேக் தொழில்​நுட்​பங்​களைப் பயன்​படுத்தி முகத்தை மார்​பிங் செய்து ஆபாச​மான மற்​றும் விரும்​பத்​த​காத படங்​கள் மற்​றும் வீடியோக்களை உரு​வாக்​கு​வதை​யும் வணிக நோக்கங்களுக்காகத் தனது அடை​யாளத்​தைப் பயன்​படுத்​து​வதை எதிர்த்​தும் அவர் மனு​தாக்​கல் செய்​திருந்​தார்.

மனுவை விசா​ரித்த மும்பை உயர் ​நீ​தி​மன்​றம், அவருடைய பெயர், புகைப்​படம், குரல், முகம் மற்​றும் அவரது ஆளுமை சார்ந்த எந்தவொரு அம்​சத்​தை​யும் அனு​மதி இன்றி பயன்​படுத்த இடைக்காலத் தடை விதித்​தது. இணை​யதளங்​கள், சமூக வலைதளங்​களில் ஸ்ருதி ஹாசன் தொடர்​பாக உருவாக்கப்பட்டுள்ள அனு​ம​தி​யற்ற டீப்ஃபேக் படங்​கள், வீடியோக்​கள் மற்​றும் குரல் பதிவு​களை உடனடி​யாக நீக்க இணைய சேவை நிறு​வனங்​களுக்கு நீதி​மன்​றம் அறி​வுறுத்​தி​ உள்ளது.

<div class="paragraphs"><p>நடிகை ஸ்ரு​தி ஹாசன்</p></div>
சட்டப்பேரவை நிகழ்வுகளை காண குழந்தைகள், பெரியவர்கள் ஆர்வம்: அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in