திரைப்​பட​மாகும் அமானுஷ்யம் சார்ந்த உண்மைக் கதை

விழா பட இயக்குநர் பாரதி பால​கு​மாரன்

விழா பட இயக்குநர் பாரதி பால​கு​மாரன்

Updated on
1 min read

திரைப்​பட​மாகும் அமானுஷ்​யம் சார்ந்த உண்​மைக் கதை

‘விழா’ படத்தை இயக்​கிய பாரதி பால​கு​மாரன் அடுத்து இயக்​கும் படத்​தில் ‘சாம்​பியன்’ படம் மூலம் அறி​முக​மான விஷ்வா நாயகனாக நடிக்​கிறார்.

முக்​கிய கதா​பாத்​திரம் ஒன்​றில் நடிக்க முன்​னணி நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடை​பெற்று வரு​கிறது. மைம் கோபி, ஆடு​களம் நரேன், ரிஷா ஜாக்​கோப்​ஸ், முனீஷ்​காந்த், அனுபமாகுமார், பாபா பாஸ்​கர், ரம்யா சுரேஷ் மற்​றும் பலர் நடிக்கின்​றனர்.

1980-களின் மத்​தி​யில், தென் மாவட்​டங்​களில் ரத்​த​மும் சதையுமாக அரங்​கேறிய ‘அமானுஷ்​யம்’ சார்ந்த உண்​மைக் கதையை மையப்படுத்தி இப்​படம் உரு​வாகிறது. ‘ஜென்​டில்​வுமன்’ படத்தை தயாரித்த கோமளா ஹரி பிக்​சர்ஸ் பட நிறு​வனம் சார்பில் கோமளா ஹரி​பாஸ்​கரன் தயாரிக்​கிறார்.

“நம் சமூகத்​தின் நீண்​ட​கால கலாச்​சா​ரம், பண்​பாடு மற்​றும் மரபுகளை வெளிப்​படுத்​தும் பதி​வாக இப்​படத்​தின் கதை உருவாகி இருக்​கிறது. இம்​மாதம் 22-ம் தேதி முதல் தொடர்ந்து 40 நாள்​கள் படப்​பிடிப்பு நடை​பெறுகிறது” என்​றது படக்​குழு.

<div class="paragraphs"><p><em>விழா பட இயக்குநர் பாரதி பால​கு​மாரன்</em></p></div>
Ammu: காயங்களை கூர்தீட்டி ஆயுதம் செய்த அம்மு | திரை தேவதைகள் 16

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in