“ஏதோ ஓட்டு பிரியுது... யாருக்கோ சரியுது..!” - வாக்களித்த பின் டி.ராஜேந்தர் கருத்து

டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்

Updated on
1 min read

சென்னை: “ஏதோ இந்த ஓட்டு பிரியுது, யாருக்கோ ஏதோ ஒண்ணு சரியுது, மக்கள் மனதில் ஏதோ ஒரு விஷயம் பத்தி எரியுது” என நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

சென்னை, தி.நகர், இந்தி பிரச்சார சபா வாக்குச்சாவடியில் டி.ராஜேந்தர் வாக்கு செலுத்தினார். பிறகு, செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஏதோ இந்த ஓட்டு பிரியுது, யாருக்கோ ஏதோ ஒண்ணு சரியுது, மக்கள் மனதில் ஏதோ ஒரு விஷயம் பத்தி எரியுது... இவ்வாறாகத் நான் தேர்தலை நான் பார்க்கிறேன்.

இன்றைய நிலையில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு குறைந்தது ரூ.20 கோடி முதல் 110 கோடி செலவு செய்ய வேண்டியுள்ளது. பதவியில் இருப்பவர்கள் பல லட்சக்கணக்கான கோடிகள் குவித்து வைத்துள்ளனர். தற்போது ஓட்டு பெறுவதற்கு சிலர் கரன்சியைதான் நம்புகிறார்கள். மக்களின் கரத்தை நம்பவில்லை” என்றார்.

<div class="paragraphs"><p>டி.ராஜேந்தர்</p></div>
“எனக்கு எல்லா கட்சியிலும் ரசிகர்கள் உள்ளதால்...” - வாக்களித்த பின் நடிகர் சிம்பு கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in