புதுவையில் 3-வது உலக திரைப்பட விழா இன்று தொடங்குகிறது: 10 நாடுகளின் 10 மொழிப் படங்களை இலவசமாக பார்க்கலாம்

புதுவையில் 3-வது உலக திரைப்பட விழா இன்று தொடங்குகிறது: 10 நாடுகளின் 10 மொழிப் படங்களை இலவசமாக பார்க்கலாம்
Updated on
2 min read

புதுச்சேரி: புதுச்​சேரி​யில் 3-வது உலகத் திரைப்​பட​ விழா இன்று தொடங்​கு​கிறது. பார்​வை​யாளர்​கள் 10 நாடு​களைச் சேர்ந்த 10 மொழிப் படங்​களை இலவச​மாக பார்க்​கலாம்.

புதுவை திரை இயக்​கம், பிரெஞ்சு மொழி மற்​றும் பண்​பாட்டை உலகெங்​கும் பரப்​பும் அலை​யன்ஸ் பிரான்​சிஸ் நிறு​வனத்​துடன் இணைந்து 3-வது உலக திரைப்பட விழாவை நடத்​துகிறது.

அலை​யன்ஸ் பிரான்​சிஸ் கருத்​தரங்கு கூடத்​தில் இன்று (ஆக.7) தொடங்கி 9-ம் தேதி வரை 3 நாட்​கள் இந்த திரைப்பட விழா நடக்​கிறது. இன்று (ஆக.7) மாலை 6 மணிக்கு இதன் தொடக்க விழா நடக்​கிறது.

<div class="paragraphs"><p>புதுச்சேரியில் நடைபெறும் 3-வது உலக  திரைப்பட விழா நிகழ்வு விவரங்களை அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குநர் லாரண்ட் ஜாலிகுஸ் வெளியிட்டார். அதை புதுச்சேரி திரை இயக்க செயலர் ரவிசந்திரன், அலையன்ஸ் பிரான்சிஸ் கலைப்பிரிவு அர்னால்ட் ராண்டிக் உள்ளிட்டோர் பெற்றனர். </p></div>

புதுச்சேரியில் நடைபெறும் 3-வது உலக திரைப்பட விழா நிகழ்வு விவரங்களை அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குநர் லாரண்ட் ஜாலிகுஸ் வெளியிட்டார். அதை புதுச்சேரி திரை இயக்க செயலர் ரவிசந்திரன், அலையன்ஸ் பிரான்சிஸ் கலைப்பிரிவு அர்னால்ட் ராண்டிக் உள்ளிட்டோர் பெற்றனர்.

திரைப்பட விழா தொடர்​பாக புதுச்​சேரி திரை இயக்க செயலர் ரவிசந்​திரன் கூறிய​தாவது: தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்​குநர் ஹரிஹரன் இன்று மாலை விழாவை அலை​யன்ஸ் பிரான்​சிஸ் திரை அரங்​கில் தொடங்கி வைக்​கிறார்.

விழா​வில் பிரான்​ஸ், ஜெர்​மனி, கொலம்​பி​யா, இலங்​கை, இந்​தி​யா, ஈரான், துனிசி​யா, தென்​கொரி​யா, சீனா நாடு​களை சேர்ந்த 10 திரைப்​படங்​கள் திரை​யிடப்​படு​கின்​றன. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திரைப்​படங்​கள் திரை​யிடப்​படு​கின்​றன.

இன்று இரவு 7 மணிக்கு ‘தி ஸ்ட்​ரேஞ்​சர் (பிரெஞ்​சு) படம் திரை​யிடப்​படும். ஆக. 8-ம் தேதி காலை 9.30 மணிக்கு ‘தி பீபி ஃபைல்​ஸ்’ (The Bibi Files) இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு​வின் மீதான ஊழல் குற்​றச்​சாட்​டு​களைப் பற்​றிய அமெரிக்க ஆவணப்​படம் வெளி​யிடப்​படும். இதையடுத்​து.

பகல் 12 மணிக்கு ‘முக்​கி​யத் திருப்​பத்​தில் சுயாதீன சினி​மா’ என்ற தலைப்​பில்​இயக்​குநர்​கள் ஹரிஹரன், சிவக்​கு​மார் மோக​னன், சோமீதரன் பங்​கேற்​கும் சிறப்பு வகுப்​பு​கள் நடக்​கும். மதி​யம் 2.15 மணிக்கு ‘அம்​ரும்’ என்ற ஜெர்​மானிய மொழித் திரைப்​படம் திரை​யிடப்​படும்.

மாலை 4.30 மணிக்கு கொலம்​பி​யா​வின் ‘ஏ பொயட்’ என்ற திரைப்​படம் திரையிடப்​படும், இரவு 7 மணிக்கு ‘நீலீ​ரா’ தமிழ் திரைப்​படம் திரை​யிடப்​படும். 9-ம் தேதி காலை 9.30 மணிக்கு பெங்​காலி திரைப்​படம் ‘மேகே டாக்கா தாரா’ திரை​யிடப்​படும்.

பகல் 12.15 மணிக்கு ஈரான் திரைப்​படம் ‘டெரஸ்​டரியல் வெர்​சஸ்’ திரை​யிடப்​படும். மதி​யம் 2. 30 மணிக்கு துனிசியா திரைப்​படம் ‘தி வாய்ஸ் ஆப் கின்ட் ராஜாப்’ திரை​யிடப்​படும், மாலை 4.30 மணிக்கு தென்​கெரியா திரைப்​படம் ‘பை த ஸ்ட்​ரீன்’, இரவு 7.15 மணிக்கு சீன திரைப்​படம் ‘தி சன் ரைசஸ் ஆன் அஸ் ஆல்’ திரை​யிடப்​படும் என்று தெரி​வித்​தார்.

தொடர்ந்​து, திரைப்பட விழா நிகழ்வு விவரங்​களை அலை​யன்ஸ் பிரான்​சிஸ் இயக்​குநர் லாரண்ட் ஜாலிகுஸ் வெளி​யிட்​டார். அதை புதுச்​சேரி திரை இயக்க செயலர் ரவிசந்​திரன்​, அலை​யன்​ஸ்​ பி​ரான்​சிஸ்​ கலைப்​பிரிவு அர்​​னால்​ட்​ ​ராண்​டிக்​ உள்​ளிட்​டோர்​ பெற்​றனர்​.

புதுவையில் 3-வது உலக திரைப்பட விழா இன்று தொடங்குகிறது: 10 நாடுகளின் 10 மொழிப் படங்களை இலவசமாக பார்க்கலாம்
காசியிலிருந்து தமிழகம் வந்த புனித கலசங்கள்: நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in