‘பத்தா’ முதல் ‘சிக்மா’ வரை: இந்த வார தியேட்டர் ரிலீஸ் பட்டியல்

‘பத்தா’ முதல் ‘சிக்மா’ வரை: இந்த வார தியேட்டர் ரிலீஸ் பட்டியல்
Updated on: 
2 min read

விஜய் சேதுபதியின் நடிப்பில் 80-களின் பின்னணியில் உருவான ‘பத்தா’ முதல் அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ வரை பல்வேறு ஜானர்களில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியல் இது.

பத்தா:  மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் பாலாஜி தரணிதரன் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான படம் ‘பத்தா’. 80-களின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்தப்   படத்தில் விஜய் சேதுபதியுடன் லிஜோமோல் ஜோஸ் நடித்திருக்கிறார். சாய் அபயங்கள் இசையமைத்திருக்கும் இந்த தமிழ் படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஏழு கடல் ஏழு மலை: ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள இந்த தமிழ் படம் அக்டோர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.

சிக்மா: ஜேசன் சஞ்சய் அறிமுக இயக்குநராக இயக்கி இருக்கும் படம், ‘சிக்மா’. சந்தீப் கிஷன்,  ஃபரியா அப்​துல்​லா, ராஜு சுந்​தரம், அன்​பு​தாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்​டா, மகாலட்​சுமி சுதர்​சனன் உள்ளிட்டோர்  நடித்துள்ளனர். தமன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் அக்டோபர் 2-ம் வெளியாகிறது.

அன்பில் அவன்: கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் காதல் ஆக்ஷன் படம் ‘அன்பில் அவன்’.  இந்தப் படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  இந்த தமிழ் படம்,  அக்டோபர் 2-ம் தேதி வெளியாகிறது.

அவரச்சன் & சன்ஸ்: அமல் ஷீலா தம்பி இயக்கத்தில் உருவாகி இருக்கும் நகைச்சுவை படம் ‘அவரச்சன் & சன்ஸ்’. பிஜு மேனன், ஸ்ரீநாத் பாசி, கணபதி, வினய் ஃபோரட், ஜானி அந்தோணி, கிரேஸ் அந்தோணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த மலையாளப் படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது.

டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்: ஷஷாங்க் யெலெய்ட்டி இயக்கத்தில்  ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள ஃபேன்டஸி நகைச்சுவைத் திரைப்படம் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’. மந்திரவாதியாக ஃபஹத் ஃபாசில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருடன், சாரா பலேகர், சவுரப் சச்தேவ், மகேஷ் மஞ்ரேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தெலுங்கு, மலையாளத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

டோரேமான் - கடலடியில் பிசாசுக்கோட்டை: டெட்சுவா யாஷிமா இயக்கி இருக்கும் இந்த அனிமேஷன் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது.

பெயில்: சிவ ராஜ்குமார் நடிப்பில் பவன் வாடேயர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கன்னடப்படம் ‘பெயில்’. இப்படத்தில் சிவ ராஜ்குமாருடன் சஞ்சனா ஆனந்த், தீக்‌ஷித் ஷெட்டி, கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, சாய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த அதிரடி படம் அக்டோர் 2-ம் தேதி திரையரங்குகளில்  வெளியாகிறது.

தெள்ள காகிதம்: ரமேஷ் பன்ட்ரெட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் காதல் திரைப்படம் ‘தெள்ள காகிதம்’. இந்தப் படத்தில் ஹர்ஷ் ரோஷன், போகபதி நக்‌ஷத்திரா சரண்யா, ராஜ் குமார்  காசிரெட்டி, தீபக் மாலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தெலுங்கு படம் அப்டோபர் 2-ம் தேதி வெளியாகிறது.

ருபயநாமக: அரவிந்த் ரெட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் சஸ்பென்ஸ் வகைப்படம் ‘ருபயநாமக’. அரவிந்த் பாண்ட்ரேட், வேணு போல்சானி, தங்கேடி அனுதீப், ஸ்ரவாணி மல்கானி, க்ராக் ஸ்ரீமணி, விஷன் ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த தெலுங்கு படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகிறது.

‘பத்தா’ முதல் ‘சிக்மா’ வரை: இந்த வார தியேட்டர் ரிலீஸ் பட்டியல்
எனது எல்லா படங்களையும் விட ‘டோரதி’ சிறந்தது: மிஷ்கின் சிலாகிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in