“அரசியலில் விஜய் எனும் சக்தி நிரந்தரம்...” - பாடகர் ஸ்ரீனிவாஸ் கருத்து

“அரசியலில் விஜய் எனும் சக்தி நிரந்தரம்...” - பாடகர் ஸ்ரீனிவாஸ் கருத்து
Updated on
1 min read

“நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் விஜய் எனும் சக்தி அரசியலில் நிரந்தரமாக நிலைத்திருக்கும்” என்று பாடகர் ஸ்ரீனிவாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக தேர்தல் வாக்குப் பதிவு குறித்து பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் தனது எக்ஸ் தள பதிவில், “இந்தத் தேர்தலில் போட்டி திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில் தான் நடப்பதாகத் தெரிகிறது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் விஜய் எனும் சக்தி அரசியலில் நிரந்தரமாக நிலைத்திருக்கவே வந்திருக்கிறார் என கருதுகிறேன்.

அதிமுக வலுவாகத் திகழும் மேற்குத் தமிழகத்தின் நிலைமை குறித்து என்னால் உறுதியாகச் சொல்ல இயலவில்லை. ஆனால், விஜய் ஆட்சிக்கு வருகிறாரோ, இல்லையோ இந்தத் தேர்தல் முழுவதுமே விஜய் எனும் நபரைச் சார்ந்தே அமையப்போகிறது என்று தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

“அரசியலில் விஜய் எனும் சக்தி நிரந்தரம்...” - பாடகர் ஸ்ரீனிவாஸ் கருத்து
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in