’சேயோன்’ படத்தின் கதைக்களம்: இயக்குநர் விளக்கம்

’சேயோன்’ படத்தின் கதைக்களம்: இயக்குநர் விளக்கம்
Updated on
1 min read

‘சேயோன்’ படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் சிவகுமார் முருகேசன் விளக்கமளித்துள்ளார். ‘தாய் கிழவி’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தினை இயக்கவுள்ளார் சிவகுமார் முருகேசன்.

ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. மேலும், ‘தாய் கிழவி’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியினை மதுரையில் சிவகார்த்திகேயன், ராதிகா சரத்குமார் மற்றும் இயக்குநர் சிவகுமார் முருகேசன் ஆகியோர் கண்டுகழித்தனர்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் சிவகுமார் முருகேசன் பேசும்போது, ”நான் இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்ட அனைவருடனும் ‘தாய் கிழவி’ படத்தைப் பார்த்தேன். சிவகார்த்திகேயன் சாரும், ராதிகா மேடமும் எனக்காகவே முதல் நாளில் இங்கு வந்து படம் பார்த்தார்கள்.

விருமாண்டி மற்றும் முருகர் என இரண்டு தெய்வங்களையும் கும்பிடுபவர்களை பற்றிய படம் தான் ‘சேயோன்’. அப்படம் யாருக்கும் எதிராகவோ, சாதமாகவோ இருக்காது. அனைத்து தெய்வங்களுக்கும் மரியாதை கொடுக்கிற படமாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் சிவகுமார் முருகேசன்.

’சேயோன்’ படத்தின் கதைக்களம்: இயக்குநர் விளக்கம்
தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் ரியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in