டோக்கியோ பட விழா​​வில் ‘காகித மலர்’

டோக்கியோ பட விழா​​வில் ‘காகித மலர்’
Updated on: 
1 min read

ஒளிப்​ப​திவாள​ரும் இயக்​குநரு​மான செழியன் இயக்​கிய ‘காகித மலர்’ திரைப்​படம், 39-வது டோக்​கியோ சர்​வ​தேச திரைப்​பட விழாவின் ஏசி​யன் பியூச்​சர் பிரி​வில் திரையிடப்​பட்​டது. இதில் படத்​தின் தயாரிப்​பாளரான பிரேமா செழியன், அவரது மகள் செல்வி அதிதா செழியன் ஆகியோர் கலந்து கொண்​டனர்.

படத்தை ஆர்​வத்​துடன் கண்டு ரசித்​த ஜப்பானிய ரசிகர்​கள், படம் நிறைவடைந்​ததும் பலத்த கைதட்​டல்​களு​டன் பாராட்​டினர். திரையிடலுக்​குப் பின்​னர் நடை​பெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்​சி​யில் பிரேமா செழியனும் அதிதா செழியனும் பதிலளித்​தனர். இத்​திரைப்​படம் பல்​வேறு நாடுகளின் பட விழாக்​களில் திரையிடப்​பட இருக்​கிறது.

டோக்கியோ பட விழா​​வில் ‘காகித மலர்’
“நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன்” - நெல்லையில் நடிகை ரோஜா உறுதி

X