“நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன்” - நெல்லையில் நடிகை ரோஜா உறுதி

“நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன்” - நெல்லையில் நடிகை ரோஜா உறுதி
Updated on: 
1 min read

நெல்லை: ‘மக்களுக்குப் பிடித்த கதைகள் கிடைத்தால் நடிப்பேன்’ என்று பிரபல நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா தெரிவித்தார்.

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த நடிகை ரோஜா, அவரது கணவரான திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மற்றும் குடும்பத்தினர் திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில் மற்றும் உச்சிஷ்ட கணபதி கோயிலில் தரிசனம் செய்தனர்.

நெல்லையப்பர் கோயிலை சுற்றிப் பார்த்த ரோஜா, கோயிலில் உள்ள இசைத் தூணை கையால் இசைத்துப் பார்த்தார். பக்தர்கள் ஆர்வமுடன் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்

சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த அவரிடம், சினிமாவில் தொடர்ந்து நடிப்பீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘மக்களுக்குப் பிடித்த நல்ல கதைகள் அமைந்தால் நிச்சயமாக திரைப்படங்களில் நடிப்பேன்’ என்று பதில் அளித்தார்.

தொடர்ந்து, தமிழக அரசியல் சூழல் மற்றும் தமிழக அரசு குறித்து செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கு பதிலளிக்க மறுத்த ரோஜா, ‘நோ பாலிடிக்ஸ்’ என்று சிரித்தபடி கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

“நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன்” - நெல்லையில் நடிகை ரோஜா உறுதி
“கல்லூரி மாணவர்களின் தேவை, பயன்பாட்டுக்கு ஏற்ப வெவ்வேறு மடிக்கணினிகள் வழங்கப்படும்” - அமைச்சர் பி.விஸ்வநாதன்

X