‘ஜமா’ இயக்குநரின் அடுத்த படம் தொடக்கம்

Pari's next movie

பாரி இளவழகனின் அடுத்த படம் பூஜையுடன் தொடக்கம்.

Updated on
1 min read

‘ஜமா’ இயக்குநர் பாரி இளவழகனின் அடுத்தப் படம் படப்பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாரி இளவழகன் இயக்கி, நடித்து வெளியான படம் ‘ஜமா’. இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. தற்போது பாரி இளவழகனின் அடுத்த படத்தினை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் நியோ காஸ்டில் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இதன் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 7-வது படம் இதுவாகும். இதிலும் பாரி இளவழகன் இயக்கி, நாயகனாக நடித்து வருகிறார். ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் நாயகியாக நடித்து வருகிறார். இதில் ரோஜா, சேத்தன், ‘பரிதாபங்கள்’ கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இதன் ஒளிப்பதிவாளராக ஷெல்லி ஆர். கேலிஸ்ட், இசையமைப்பாளராக பரத் சங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். சென்னையில் பெரம்பூர் பகுதியினை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Pari's next movie
தமிழ் சினிமா 2025: நம்பிக்கைக்குரிய அறிமுக இயக்குநர்கள்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in