

சித்து, தர்ஷிகா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம், ‘தி டார்க் ஹெவன்’. இந்த க்ரைம் த்ரில்லர் படத்தை பாலாஜி இயக்கியிருந்தார். ட்ரீம் 7 சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் இதே டீம் மீண்டும் இணையும் படத்துக்கு ‘தி லாஸ்ட் கேஸ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
சித்து நாயகனாக நடிக்கும் இப்படத்தில் தர்ஷிகா நாயகியாக நடிக்கிறார். ஜெயக்குமார் உள்பட பலர் நடிக்கின்றனர். இதன் பூஜை சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். இயக்குநர் பாலாஜி கூறும்போது, “தி டார்க் ஹெவன், ஓடிடியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த மகிழ்ச்சியோடு இப்படத்தை தொடங்கி இருக்கிறோம்.
இதுவும் க்ரைம் த்ரில்லர் படமாகத்தான் உருவாக இருக்கிறது. ஒரு மலைப் பகுதியில் நடைபெறும் குற்றப் புலனாய்வு கதையாக இருந்தாலும் இந்தப் படம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இதில் பின்புலமாக வருகிற நிலவியல் காட்சிகள், படத்தை வேறுபடுத்திக் காட்டும்” என்றார்.