

முனீஸ்காந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம், ‘தி டார்ம்’. இதில் ஷாலினி, காசி தங்கம், சபரீஷ், சாம் ஜான், அருண் கார்த்திக், நிகில் நாயர், வசுந்தரா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இளையராஜா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு சாம் விஷால் இசையமைக்கிறார். இதை குட் ஸ்டஃப் சார்பில் பி.டில்லி தயாரிக்கிறார். தீபா ஸ்ரீதர் இயக்குகிறார்.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். “அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் புதுமையான கதை அம்சத்துடன் இப்படம் உருவாகிறது” என்று படக்குழு தெரிவித்துள்ளது.