‘ஸ்பா’​வில் தாலி செயின் மாயம்: வினோதினி போலீஸில் புகார்

‘ஸ்பா’​வில் தாலி செயின் மாயம்: வினோதினி போலீஸில் புகார்
Updated on
1 min read

பாலு மகேந்​திரா இயக்​கிய ‘வண்ண வண்ண பூக்​கள்’, ‘மறு​படி​யும்’ உள்பட பல படங்​களில் நடித்​தவர் வினோ​தினி. இப்​போது குணசித்​திர வேடங்​களி​லும் சின்​னத்​திரைத் தொடர்​களி​லும் நடித்து வரு​கிறார். இவர் ஸ்பா ஒன்​றில் தனது தாலியை தொலைத்​து​விட்​ட​தாக போலீ​ஸில் புகார் அளித்​துள்​ளார்.

இதுபற்றி அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது : மன அழுத்​த​மாக இருக்​கிறது என்று கடந்த வெள்​ளிக்​கிழமை சிஐடி காலனி​யில் உள்ள ஸ்பா ஒன்​றுக்கு சென்​றிருந்​தேன்.

அப்​போது அங்​கிருந்​தவர் கழுத்​தில் மசாஜ் செய்ய வேண்​டும், தாலியைக் கழற்றி விடுங்​கள் என்​றார். கழற்​றிக் கொடுத்​தேன். அதை அவர் ஒரு டப்​பா​வில் போட்​டார். மசாஜ் முடிந்​ததும் தூங்​கும் மூடில், தாலி செயினை மறந்​து​ வீட்​டுக்​குச் சென்​று​விட்​டேன். மறு​நாள் கணவர் வீட்​டில் ஒரு இறப்​பு. அன்று அங்கு பிசி​யாக இருந்​து​விட்​டேன்.

ஞாயிற்​றுக்​கிழமை​தான் தாலி செயின் ஞாபகம் வந்​தது. உடனே அடித்​துப் பிடித்து ஸ்பாவுக்கு சென்று அந்த தாலி செயினை கேட்​டேன். அவர்​கள், ‘டப்​பா​வில் இல்​லை​யே,ஸாரி எங்​களால் ஒன்​றுமே செய்ய முடி​யாது’ என்று கூறி​விட்​டார்​கள். கடந்த 2 மாத​மாக இருந்த சோகத்​தில் இருந்து சஜமான வாழ்க்​கைக்​குத் திரும்​பி​னால், அதிக சோக​மாகி​விட்​டதே என்று நினைத்​துக்​கொண்​டேன்.

இதுபற்றி போலீ​ஸில் புகார் செய்​திருக்​கிறேன். என் தாலி கிடைத்​து​விடும் என்று நம்​பு​கிறேன். இந்​தப் பதிவு ஏன் என்​றால், ஸ்பாவுக்கு செல்​கிறவர்​கள் தயவு செய்து அங்கு இருப்​பவர்​களை நம்​பி, எந்த விலை​யுயர்ந்த நகைகளை​யும் கொண்டு செல்​லாதீர்​கள். அவர்​கள் இப்படிச் செய்​வார்​கள் என்று நினைக்​க​வில்​லை. இதைச் சிரித்​துக்​கொண்டே சொன்​னாலும் அது மனதில் காயத்தை ஏற்​படுத்தி இருக்​கிறது. இவ்​வாறு வினோ​தினி கூறி​யுள்​ளார்.

‘ஸ்பா’​வில் தாலி செயின் மாயம்: வினோதினி போலீஸில் புகார்
அருண்ராஜா காமராஜ் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in