

அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தாய்நிலம்’. டாக்டர் அமர் ராமச்சந்திரன், நேகா அமர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் தீபக் பிரபாகர், பத்மஜா, நிமிஷா நம்பியார், குரு தட்சணா, தளபதி ஆனந்த், சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரசாந்த் பிரணவம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் இசையை ஔசேப்பச்சன் அமைத்துள்ளார்.இலங்கையில் நடைபெற்ற போரின் பின்னணியில், தாய்நிலத்தை விட்டு வெளியேறிய பிறகு புதிய இடத்தில் வாழ்க்கையைத் தொடங்கும் தந்தையும் மகளும் சந்திக்கும் சவால்களையும், அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்களின் அன்பையும் பேசும் படம் இது. பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கவனம் பெற்ற இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் அக். 9-ல் திரையரங்குகளில் வெளியாகிறது.