‘ஓம்’ பட வெளியீடு தள்ளிப்போவது ஏன்? – தனுஷ் விளக்கம்

‘ஓம்’ பட வெளியீடு தள்ளிப்போவது ஏன்? – தனுஷ் விளக்கம்
Updated on
1 min read

ரஜினி படம் வெளியாக இருப்பதன் காரணமாக தனது ‘ஓம்’ பட வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் நமது படம் வெளியாக இருக்கும் ஒரு நாளுக்கு முன்பாக, அக்டோபர் 15-ம் தேதி வெளியாக இருக்கிறது. அவர் மீதான மரியாதையின் காரணமாக எங்களின் ‘ஓம்’ படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம்.

அதேபோல் இந்த தீபாவளிக்கு சூர்யாவின் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதால், ‘ஓம்’ படம் தீபாவளிக்கும் வெளியாகாது. ஞாயமாக சொல்வதென்றால், அவர்கள் தான் தங்களின் படங்களுக்கான வெளியீட்டு  தேதிகளை முதலில் அறிவித்தார்கள்.

சினிமா துறையின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு, பெரிய திரைப்படங்கள் புரிதலுடன் ஒவ்வொருவரின் முடைிவுகளை மதித்து நடக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். விரைவில் ஓம் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ரஜியின் ‘ஜெயிலர் 2’ படம் அக்டோபர் 15-ம் தேதியும், சூர்யாவின் ‘சீன்’ படம் இந்த தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒண்​டர்​பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் தனுஷின் 55-வது படமான ‘ஓம்: சாப்டர் 1’ படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். எழிலரசு ஒளிப்​ப​திவு செய்திருக்கிறார். படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில், தனுஷ், மம்முட்டியுடன் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

‘ஓம்’ பட வெளியீடு தள்ளிப்போவது ஏன்? – தனுஷ் விளக்கம்
கரகாட்டக்காரன்: வைக்கோல் வாசம் வீசும் கிராமத்து நினைவுகள் | சினிமாபுரம் 11

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in