ஓடிடியில் ஏப்.10-ல் ‘தாய் கிழவி’ வெளியீடு

ஓடிடியில் ஏப்.10-ல் ‘தாய் கிழவி’ வெளியீடு
Updated on
1 min read

ஏப்ரல் 10-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ‘தாய் கிழவி’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்ட இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் பெற்ற வரவேற்பைப் போல, ஓடிடி தளத்தில் மாபெரும் வரவேற்பைப் பெரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டது. 2026-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை இப்படம் நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் பாலசரவணன், சிங்கம் புலி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் ராதிகாவுன் நடித்திருந்தனர்.

’தாய் கிழவி’ படம் பார்த்துவிட்டு கமல் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருந்தனர். அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தினை இயக்க தயாராகி வருகிறார் ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன்.

ஓடிடியில் ஏப்.10-ல் ‘தாய் கிழவி’ வெளியீடு
சல்மான்கானை இயக்கும் வம்சி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in