சல்மான்கானை இயக்கும் வம்சி

சல்மான்கானை இயக்கும் வம்சி
Updated on
1 min read

வம்சி இயக்கவுள்ள அடுத்தப் படத்தின் நாயகனாக சல்மான்கான் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தினை இயக்கியவர் வம்சி. இவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநராவார். ‘வாரிசு’ படத்துக்கு பின் பல்வேறு முன்னணி நாயகர்களிடம் கதைகள் கூறிவந்தார். இறுதியாக சல்மான்கானை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது அப்படத்தினை தில் ராஜு தயாரிக்க அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. சல்மான்கான் நடிக்கும் அடுத்த படமாக இது உருவாகிறது. கமர்ஷியல் பாணியில் உருவாகும் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரிக்க தில் ராஜு முடிவு செய்திருக்கிறார்.

தில் ராஜு – சல்மான்கான் – வம்சி கூட்டணி அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு, தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது சல்மான்கான் உடன் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சல்மான்கானை இயக்கும் வம்சி
‘லீடர்’ பார்த்துவிட்டு தனுஷ் – வெற்றிமாறன் பாராட்டு: லெஜண்ட் சரவணன் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in