தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டு நீட்டிப்பு

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டு நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க விதி​களின்​படி 3 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை சங்​கத்​துக்கு தேர்​தல் நடத்​தப்பட வேண்​டும். அதன்​படி, கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்​தெடுக்​கப்​பட்​டவர்களின் பதவிக்காலம் கடந்த 2025 மார்ச் மாதத்​துடன் முடிவடைந்த நிலை​யில் இவர்​களின் பதவிக்​காலத்தை மேலும் 3 ஆண்​டு​களுக்கு நீட்​டித்து சங்க பொதுக்​குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

இந்த தீர்​மானத்தை எதிர்த்​தும், உயர் நீதி​மன்ற ஓய்​வு​பெற்ற நீதிப​தியை ஆணை​ய​ராக நியமித்து சங்​கத் தேர்​தலை நடத்த உத்​தர​விடக் கோரி​யும், சங்க உறுப்​பின​ரான நம்​பி​ராஜன் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.மரியா கிளேட் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது சங்க நிர்​வாகி​களின் பதவிக்​காலத்தை மேலும் 3 ஆண்​டு​களுக்கு நீட்​டித்து நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானத்தை சங்​கங்​களின் பதி​வாளர் ஏற்று உத்​தரவு பிறப்​பித்​துள்​ள​தாக நடிகர் சங்​கம் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

அதையடுத்து இது தொடர்​பாக எழுத்​துப்​பூர்வ வாதங்​களை தாக்​கல் செய்ய உத்​தர​விட்ட நீதிப​தி, வழக்கு விசா​ரணையை மார்ச் 24-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​துள்​ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டு நீட்டிப்பு
மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் திருப்பம்: மன அழுத்தத்தில் பொய் புகார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in