லண்டனில் சிம்பொனி சாதனை: லிடியன் நாதஸ்வரத்துக்கு உற்சாக வரவேற்பு!

லண்டனில் சிம்பொனி சாதனை: லிடியன் நாதஸ்வரத்துக்கு உற்சாக வரவேற்பு!
Updated on
1 min read

இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம், லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவின் 92 இசைக்கலைஞர்களுடன் "சிம்பொனி நம்பர் 1 - நியூ பிகினிங்ஸ்" என்ற தனது முதல் ஆல்பத்தைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். புகழ்பெற்ற மேட்டங்க்லி இந்த சிம்பொனியை வழிநடத்தியுள்ளார்.

இந்த இசைப்பதிவை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மதிமுக தலைவர் வைகோ, அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னியரசு ஆகியோர் பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் லிடியன் நாதஸ்வரம் பேசும்போது, “லண்டன் இசைக்கலைஞர்கள் இந்த இசையைக் கேட்டுப் பாராட்டியது மகிழ்ச்சியை அளித்தது. இந்த சாதனையைத் தொடர்ந்து, ஜூன் 21-ம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் இந்த ஆல்பத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் ஆடியோ பிரீமியர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது” என்றார்.

லண்டனில் சிம்பொனி சாதனை: லிடியன் நாதஸ்வரத்துக்கு உற்சாக வரவேற்பு!
Thigi: ஆழ்மன ‘ரகசிய’ வலி, துணிவைப் பேசும் ஹேமாவும் மகள்களும் | திரை தேவதைகள் 20

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in