“எனது 3 படங்களில் நடிக்க நஸ்ரியா மறுத்தார், ஆனால்...” - சூர்யா பகிர்வு

“எனது 3 படங்களில் நடிக்க நஸ்ரியா மறுத்தார், ஆனால்...” - சூர்யா பகிர்வு
Updated on: 
1 min read

‘சீன்’ படத்தில் நடிப்பதற்கு முன்பாக தனது மூன்று படங்களில் நடிக்க நஸ்ரியா மறுத்துவிட்டதாகவும், நான்காவது முறையாக அவர் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்ததாகவும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சீன்’. இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி திரைக்கு வர இருகிறது. இதனிடையே படத்துக்கான ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், ‘சீன்’ படத்துக்கான முன்வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் திங்கள்கிழமை (நவ.2) நடந்தது. 

அதில் பேசிய நடிகர் சூர்யா, “தி ஒன் (The One) என்பதுடன் எனக்கு இருக்கும் தொடர்பு, அந்த ‘தி ஒன்’ நான் கிடையாது. அது நாம் அனைவரும் ஒன்று என்பதால் தான் அது ‘தி ஒன்’.

இதை எனது பெயராகவோ, டேக் லைனாகவோ நான் பார்க்கவில்லை. நாம் அனைவரும் ஒன்று சேரும் போதுதான் அது ‘தி ஒன்’னாக மாறுகிறது. அப்படிதான் நான் அதைப் பார்க்கிறேன்.

பல ஆண்டுகளாக நிபந்தனை இல்லாமல் தொடரும் இந்த அன்புக்கு நன்றி என்கிற ஒற்றை வார்த்தை ஈடாகாது. இதற்காக நான் என்றென்றும் உங்களிடம் சரணடைந்து இருப்பேன். எப்போதும் உங்களுடம் இருப்பேன். திரையில் உங்களை மகிழ்வித்துக் கொண்டிருப்பேன்.

இந்த ஆண்டில் இப்படி மேடையில் நிற்பது மூன்றாவது முறையாக நடக்கிறது. இதை நான் ஆசிர்வாதமாகவே கருதுகிறேன். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இதை ஏற்றுக்கொள்கிறேன். இது எல்லாம் உங்களால்தான் சாத்தியமானது.

நான் ஏற்கெனவே சொன்னது போல இந்தப் படம் மர்மம், கிறுக்குத்தனத்துடன் கூடிய நகைச்சுவையாக இருக்கும்.

இங்கே அழகான நஸ்ரியா இருக்கிறார். சில நேரங்களில் நமக்கு சில நல்ல நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனத் தோன்றும். ‘சீன்’ படத்துக்கு முன்பு மூன்று முறை நஸ்ரியாவிடம் நடிக்க கேட்டிருக்கிறோம். அப்போது எல்லாம் அவர் மறுத்துவிட்டார்.

நான்காவது முறை இந்தப் படத்துக்கு சம்மதம் தெரிவித்தார். இந்த 10 - 12 ஆண்டுகளில் அவர் பல நடிகர்கள், இயக்குநர்களுக்கு ‘நோ’ சொல்லி இருக்கிறார். இறுதியாக இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்து நடித்ததற்கு நன்றி. அவர் ஓர் இயல்பான நடிகை” என்று சூர்யா பேசினார்.

ழகரம் ஸ்டூடியோஸ் சார்பில் சூர்யாவும் ஜோதிகாவும் தயாரித்துள்ள ‘சீன்’ படத்தில் நஸ்ரியா, நஸ்லென், ஜான் விஜய், ஆனந்த ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நஸ்ரியா மீண்டும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் முதல் முறையாக சூர்யாவுடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்தப் படம் நவம்பர் 6 அன்று திரையில் வெளியாக இருக்கிறது.

“எனது 3 படங்களில் நடிக்க நஸ்ரியா மறுத்தார், ஆனால்...” - சூர்யா பகிர்வு
ஹான்ஸ் ஸிம்மருடன் இசை அமைத்த அனுபவம் - வீடியோவுடன் ரஹ்மான் நெகிழ்ச்சி பகிர்வு

X