‘நாங்க நாலு பேரு’ - கருப்பு படத்தின் அடுத்த சிங்கிள் பாடலை வெளியிட்டது படக்குழு

‘பேபி கண்ணனாக’ வரும் ஆர்.ஜே.பாலாஜி
‘நாங்க நாலு பேரு’ - கருப்பு படத்தின் அடுத்த சிங்கிள் பாடலை வெளியிட்டது படக்குழு
Updated on
1 min read

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. வரும் மே மாதம் இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாங்க நாலு பேரு’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் சூர்யா உடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்துள்ளது.

இந்நிலையில், பாடகர் அசல் கோலார் எழுதியுள்ள ‘நாங்க நாலு பேரு’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் நடிகர் சிலம்பரசன், சாய் அப்யங்கர் மற்றும் அசல் கோலார் இணைந்து பாடி உள்ளனர்.

சுமார் 3.28 நிமிடம் ரன் டைம் கொண்ட பாடலின் பெரும்பாலான புரோமோ காட்சியில் ஆர்.ஜே.பாலாஜி வருகிறார். இந்தப் படத்தில் அவர் ‘பேபி கண்ணன்’ என்ற பாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இந்த பாடலின் புரோமோவில் கடைசியாக சில நிமிடங்கள் மட்டுமே சூர்யா வருகிறார். மற்ற நேரம் அனைத்தும் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் படக்குழுவினர் உள்ளனர்.

‘நாங்க நாலு பேரு’ - கருப்பு படத்தின் அடுத்த சிங்கிள் பாடலை வெளியிட்டது படக்குழு
பாமகவும் 18 தொகுதிகளும்: அன்புமணிக்கு காத்திருக்கும் சவால்கள், சம்பவங்கள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in