“டிசி பற்றியே பேச்சு...” - லோகேஷ் கனகராஜுக்கு சூர்யா வாழ்த்து

“டிசி பற்றியே பேச்சு...” - லோகேஷ் கனகராஜுக்கு சூர்யா வாழ்த்து
Updated on
1 min read

எல்லோரும் ‘டிசி’ படம் பற்றி பேசுவதையும், ரசிப்பதையும்  பார்க்க முடிகிறது என்று லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகியிருக்கும் படம் ‘டிசி’. இந்தப் படத்தில் அவருடன் வகாமி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளனர். வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் பரவலான கவனம் பெற்று வருகிறது.

அத்துடன் லோகேஷ் கனகராஜை திரைத் துறையினர் பலர் பாராட்டி வருகின்றனர். இயக்குநர்கள் சேரன், வசந்த பாலன் ஏற்கெனவே பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், தற்போது நடிகர் சூர்யாவும் படத்தையும், லோகேஷ் கனகராஜையும் பாராட்டியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் சூர்யா பதிவிட்டுள்ளார். அதில், ‘லோகேஷ் கனகராஜுக்கும், அருண் மாதேஸ்வரனுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

எல்லோரும் ‘டிசி’ படம் பற்றி பேசுவதையும், படத்தை ரசிப்பதையும் பார்க்க முடிகிறது. சிறந்த ஆல்பம் அனிருத். படக்குழுவினருக்கு பாராட்டுகளும் மகிழ்ச்சியும்’ என்று தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் ‘ரோலக்ஸ்‘ என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். அந்த பாத்திரத்தை மையமாக வைத்து சூர்யா நடிப்பில் ஒரு படம் எடுக்க இருப்பதாக லோகேஷ் அறிவித்திருந்தார். பின்பு படம் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்தநிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் ‘ரோலக்ஸ்’ படம் பற்றி பேசிய சூர்யா, “லோகேஷ் கனகராஜ் என்ன செய்ய இருக்கிறார் என எனக்கு தெரியாது. அவர் ஏற்கெனவே அல்லு அர்ஜுன்  படத்தில் பிஸியாக இருக்கிறார். ‘விக்ரம் 2’ படமும் அவருக்கு இருக்கிறது. அவர் கொடுத்த பேட்டியில் ‘ரோலக்ஸ்’ படத்தை எழுதிக்கொண்டு இருக்கிறார் என்று அறிந்தேன். அது எப்போது நடக்கும் என்று காலம்தான் பதில் சொல்லும்” என்று கூறியிருந்தார்.

“டிசி பற்றியே பேச்சு...” - லோகேஷ் கனகராஜுக்கு சூர்யா வாழ்த்து
DC: விமர்சனம் - வியக்க வைத்ததா லோகேஷ், அருண், அனிருத் ‘விருந்து’?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in