நிகிலா விமலின் ‘அனலி’ வெப் தொடர் கூடத்​தாயி கொலை வழக்கு கதை​யா? - தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

நிகிலா விமலின் ‘அனலி’ வெப் தொடர் கூடத்​தாயி கொலை வழக்கு கதை​யா? - தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

கேரள மாநிலம் கோழிக்​கோடு மாவட்​டத்​தில் உள்ள தாமரைச்​சேரி அரு​கில் உள்​ளது, கூடத்​தாயி என்ற கிராமம். இங்கு ஓய்வுபெற்ற கல்வி அதி​காரி​யான ஜான் தாமஸ், அவருடைய மனைவி அன்​னம்​மா, மகன் ரோய் தாமஸ், அன்​னம்​மாளின் அண்​ணன் மேத்​யூ, ஜான் தாமஸின் அண்​ணன் மரு​மகள் பீலி, அவரது ஒரு வயது குழந்தை அல்​பன் என அனைரும் ஒரே குடும்​ப​மாக வசித்து வந்​தனர்.

2002-ம் ஆண்டு முதல் 2016 வரை இவர்​கள் அடுத்​தடுத்து உயி​ரிழந்​தனர். இவர்​கள் அனை​வரின் இறப்​பும் ஒரே மாதிரி​யாக இருந்​த​தால் சந்​தேகத்தை ஏற்​படுத்​தி​யது.

இதையடுத்து தொடரப்​பட்ட வழக்​கின் அடிப்​படை​யில் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர். அதில் சொத்​துகளை அபகரிக்க அதே குடும்​பத்​தைச் சேர்ந்த மரு​மகள் ஜோலி​தான் இதைச் செய்​தது என்​பதும் உணவில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்​து, அவர் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். இந்த வழக்கு கேரளா​வில் பரபரப்​பாகப் பேசப்​பட்​டது.

இந்​நிலை​யில் ‘அனலி’ என்ற வெப் தொடரை மிதுன் மானுவல் தாமஸ் என்​பவர் உரு​வாக்​கி​யுள்​ளார். நிகிலா விமல், லியோனா லிஷோய் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்ள இதன் டீஸர் சமீபத்​தில் வெளி​யானது. இது ஜியோ ஹாட்​ஸ்​டார் தளத்​தில் விரை​வில் வெளி​யாக இருக்​கிறது.

இந்​நிலை​யில் இந்த வெப்​தொடர், கூடத்​தாயி கொலை வழக்கை மைய​மாகக் கொண்டு உரு​வாக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் அதனால் இத்​தொடரை வெளி​யிடத் தடை விதிக்க வேண்​டும் என்​றும் இவ்​வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்ள ஜோலி, கேரள உயர் ​நீ​தி​மன்​றத்​தில் வழக்​குத் தொடுத்​திருந்​தார்.

அத்தொடர் வெளிவந்​தால் நேர்​மை​யான விசா​ரணை​யைப் பா​திக்​கும் என்று அம்​மனு​வில் கூறி​யிருந்​தார். மனுவை வி​சா​ரித்த கேரள உயர்​ நீதி​மன்​ற நீதிப​தி வி.ஜி.அருண்​, டீஸரில்​ காணப்​படும்​ சில ஒற்​றுமை​களைத்​ தவிர, இது​போன்​ற குற்​றச்​சாட்​டு​களை நிரூபிக்​க போது​மான ஆதா​ரம்​ இல்​லை என்​று கூறி, தடை உத்​தரவு பிறப்​பிக்​க மறுத்​துவிட்​டார்​.

நிகிலா விமலின் ‘அனலி’ வெப் தொடர் கூடத்​தாயி கொலை வழக்கு கதை​யா? - தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ ஷூட்டிங் நிறைவு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in