

நடிகர் சூர்யாவின் 47-வது படத்தை ‘ஆவேஷம்’ என்ற மலையாளப் படத்தை இயக்கிய ஜீத்து மாதவன் இயக்கியுள்ளார். இதில் சூர்யா, போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பிரேமலு நஸ்லென், நஸ்ரியா, ஜான்விஜய், ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் இதை தயாரித்துள்ளனர்.
ஆக் ஷன்-காமெடி படமான இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்ற போஸ்டர் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. அதில் மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார்.