‘சூர்யா 46’ வெளியீடு எப்போது? – தயாரிப்பாளர் விளக்கம்

‘சூர்யா 46’ வெளியீடு எப்போது? – தயாரிப்பாளர் விளக்கம்
Updated on
1 min read

‘சூர்யா 46’ வெளியீடு எப்போது என்பதற்கு தயாரிப்பாளர் நாக வம்சி விளக்கமளித்துள்ளார்.

வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சூர்யா46’. இதன் வெளியீடு எப்போது என்பது தெரியாமல் உள்ளது. இன்னும் இதன் தலைப்பு உள்ளிட்ட எதுவுமே வெளியாகவில்லை. இதனிடையே இப்படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் நாகவம்சி அளித்துள்ள பேட்டியில், “’கருப்பு’ வெளியாகி 3-4 மாதங்கள் கழித்தே ‘சூர்யா46’ வெளியாகும். இந்த இரண்டு படங்களுக்கும் இடையே போதுமான இடைவெளி வேண்டும் என விரும்புகிறேன்.

ஏப்ரலில் ‘கருப்பு’ வெளியானால், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ‘சூர்யா46’ படத்தினை எதிர்பார்க்கலாம். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருக்கிறது. இன்னும் 5 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. குறிப்பிடத்தக்க வயது வித்தியாசம் கொண்ட நபர்களுக்கு இடையிலான காதல் கதையாக இப்படம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் நாகவம்சி.

’சூர்யா 46’ படத்தில் சூர்யா, ரவீனா டண்டன், ராதிகா சரத்குமார், மமிதா பைஜு, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.

‘சூர்யா 46’ வெளியீடு எப்போது? – தயாரிப்பாளர் விளக்கம்
தேர்தல் முடிந்தவுடன் ‘கருப்பு’ வெளியீடு: ஆர்.ஜே.பாலாஜி தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in