

சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ‘தாயன்’. புதுமுகங்களான யூரி பிலிப்போவ், சதீஷ்குமார் குளமந்தை, அலெக்செய் ஷெவ்சென்கோ, நெய்லியா, இம்மானுவேல், ஜாவித் அப்பாஸ், செர்கெய், நிவாஷ் ஆகியோருடன் ‘எதிர்நீச்சல்’ ராதிகா வைரவேலவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இளையராஜா இசையமைக்கிறார். ஸ்காஸ்கா ஃபிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் டாடியானா பேபன்கோ மற்றும் பிரக் ஷை பாபு ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை பா.சதாம் இயக்கியுள்ளார்.
அவர் கூறும்போது, ‘‘தாயன் என்பதை சக்திகளை உருச் செய்த ஒருவன் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி த்ரில்லரை ரசிப்பவர்களுக்கு இப்படம் நிச்சயம் விருந்து படைக்கும். ஹாலிவுட் படங்களில் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த பல நடிகர்கள் ஒன்றாக பங்கேற்றிருப்பார்கள்.
நாங்களும் இப்படத்தை ஆரம்பிக்கும் போதே அதே ஐடியாவுடன் தான் ஆரம்பித்தோம். இதில் ரஷ்யா, சீனா, ஜிம்பாப்வேயைச் சேர்ந்த நடிகர்கள் நடித்துள்ளனர். இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் திரைக்கு வரும்” என்றார்.