‘ஜெயிலர் 2’ அப்டேட்: ஷாரூக்கான் காட்சிகள் படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்

‘ஜெயிலர் 2’ அப்டேட்: ஷாரூக்கான் காட்சிகள் படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்
Updated on
1 min read

‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினி – ஷாரூக்கான் இணைந்து நடிக்கும் காட்சிகள் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

’ஜெயிலர் 2’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் ஷாரூக்கான் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடைய தேதிக்காகவே படக்குழு காத்திருக்கிறது. இதில் ரஜினி – ஷாரூக்கான் பங்குபெரும் காட்சிகள் படப்பிடிப்போடு ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.

இப்படத்தினை ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்தவுடன், ‘ஜெயிலர் 2’ விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளது. இதில் முதல் பாகத்தின் நடிகர்கள் தவிர்த்து, ஷாரூக்கான் – எஸ்.ஜே.சூர்யா – விஜய் சேதுபதி – சுராஜ் வெஞ்சுரமுடு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர் 2’. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகி பாபு, சிவராஜ் குமார், மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார்.

‘ஜெயிலர் 2’ அப்டேட்: ஷாரூக்கான் காட்சிகள் படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்
சிவகார்த்திகேயன் தயாரிக்கவுள்ள அடுத்த படம் அறிவிப்பு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in