

‘வெத்து வேட்டு’, ‘பரிவர்த்தனை’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.மணிபாரதி அடுத்து இயக்கியுள்ள படம், ‘தி பெட்’. இதில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், சிருஷ்டி டாங்கே நாயகியாகவும் நடித்துள்ளனர்.
ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீநிதி புரொடக் ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் தயாரித்துள்ள இப்படத்தைக் கோவையைச் சேர்ந்த ஆஞ்சநேயா புரொடக் ஷன்ஸ் வெளியிடுகிறது.
கே.கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு தாஜ்நூர் இசையமைத்துள்ளார். ஊட்டியில் உள்ள ஒரு காட்டேஜில் இருக்கும் ‘பெட்’டின் பார்வையில் இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படம் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.