

அறிமுக இயக்குநர் டல்ஹௌசி பிரபு இயக்கி நடிக்கும் படம், ‘சிவப்பு நடத்திரம்’. இதில் வர்ஷா, பொன்வண்ணன், ஓஏகே சுந்தர், பழ.கருப்பையா, சித்தார்த், தீரன், பாலமுருகன், டெல்டா வீரா என பலர் நடிக்கின்றனர்.
லீஹரி பிக்சர்ஸ் சார்பில் பி.சின்னத்தம்பி, ஹரி சங்கர் தயாரிக்கும் இப்படத்துக்கு பிகே ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.சி இசை அமைத்துள்ள இப்படத்தின் டைட்டிலை சமுத்திரக்கனி வெளியிட்டார். “இயற்கை வளங்கள் அனைத்தும் மனித குலத்தின் பசியைத் தீர்ப்பதற்குத் தான்.
மாறாகப் பணம் படைத்தவர்கள் அதனைப் பதுக்கி வைத்து செயற்கையாகப் பஞ்சத்தை உருவாக்குவதற்கு அல்ல. இதையெல்லாம் கண்டும் காணாமல் வாழ்ந்தால் இங்கு எதுவுமே பிரச்சினையில்லை. அதற்கு எதிராக வாழ்ந்தால் எல்லாமே பிரச்சினைதான் என்பதை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது” என படக்குழு தெரிவித்துள்ளது.