சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!
Updated on
1 min read

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தொடக்கம் குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை  வெளியிட்டு பதிவிட்டுள்ளது. அதில், ‘ஆடி வெள்ளி பூத்திருச்சு, புது பொழுது விடிஞ்சிருச்சு, ‘சேயோன்’ 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கிருச்சு’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் 38 விநாடிகள் ஓடும் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், ‘ஆடி வெள்ளி பூத்திருச்சு உச்சி பூச காத்திருக்கு ஏத்துக்கிட்டு வெளியே வா வெளியே வா வெளியே வா’ என்ற ‘விருமாண்டி’ பட பாடல் வரிகள் திரையில் தெரிய, குரலும் அதையே ஒலிக்க, உச்சி மலைக்காட்டில் தனியாக நிற்கும் ஒருவரை நோக்கி கேமரா பயணிக்கிறது.

பின்னணியில், ‘மறுகி நின்னா மனக்குறையை தீர்த்து வைக்கும் மாயோனே... மழையாய் வந்து நிலத்தையெல்லாம் செழிக்க வை சேயோனே’ என்ற பாடல் ஒலிக்க, கேமரா திரும்பி நிற்கும் சிவகார்த்திகேயனின் முகம் காட்டி நிலைகொள்கிறது.

‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசனுடன் இணைந்து சிவகார்த்திக்கேயன் நடித்து வரும் படம், ‘சேயோன்’. ராஜ்கமல் பிலிம்ஸ், டர்மரிக் மீடியா சார்பில் கமல்ஹாசன், மகேந்திரன் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தில் பாக்ய ஸ்ரீ போஸ், பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

கமல்ஹாசன் தொடங்கி வைக்க முதல்கட்ட படபிடிப்பு கடந்த மே மாதம் நடைபெற்றது. தற்போது 2-ம்கட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடங்கி இருக்கிறது. சுமார் ஒரு மாதம் வரை மதுரை, அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடக்க இருக்கும் படப்பிடிப்பில் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!
சந்தோஷ் நாராயணன், மன்னர் முத்துவின் ‘மன்னாரு’ பாடல் வெளியீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in