சிம்பு படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்?

சிம்பு படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்?
Updated on
1 min read

சிம்புவின் புதிய படத்தின் தயாரிப்பாளர் மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘அரசன்’ படத்தை முடித்துவிட்டு, ‘ட்யூட்’ இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் சிம்பு. இதன் பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.

முதலில் இப்படத்தை ‘ட்யூட்’ படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே தயாரிப்பதாக இருந்தது. தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு பதிலாக சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. இதன் பொருட்செலவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளன. இது சுமுகமாக முடியும் பட்சத்தில் படப்பூஜையுடன் முதற்கட்டப் பணிகளைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்தப் படத்தில் சிம்பு உடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. ’அரசன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முடித்துவிட்டு கீர்த்தீஸ்வரன் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் சிம்பு. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்?
Nooru Saami - செல்வி உடைத்த தாய்மை எனும் புனித பிம்பம் | திரை தேவதைகள் 31

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in