தி டார்க் ஹெவன்: துணிச்சலான முடிவுக்கு வரவேற்பு!

தி டார்க் ஹெவன்: துணிச்சலான முடிவுக்கு வரவேற்பு!
Updated on: 
1 min read

கடந்த வெள்ளியன்று 14 நடுத்தர, சிறு முதலீட்டுப் படங்கள் கூட்டமாக ரிலீஸ் ஆகின.

அவற்றில் நாட்டார் கதையுடன் கூடிய க்ரைம் த்ரில்லர் படமாக வெளியான 'தி டார்க் ஹெவன்', ஓட்டத்தில் முன்னாள் வந்து வெற்றிபெற்றுள்ளது. இதில் பிக்பாஸ் புகழ் சித்து நாயகனாக நடித்திருக்கிறார்.

மற்றொரு பிக்பாஸ் பிரபலம் தர்ஷிகாவும் நடிப்புக்காகப் பெயர் பெற்ற ரித்விகாவும் இரண்டு நாயகிகளாக நடித்துள்ளனர்.

வேல.ராமமூர்த்தி, நிழல்கள் ரவி உள்படப் பல முன்னணி நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றிருந்தனர். இப்படத்தை எழுதி, இயக்கியிருக்கும் பாலாஜி ‘டி3’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர்.

இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார் பிரபலத் தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயன்.

“தற்போது, ஒன்பது படங்களுக்கு மத்தியில் 'தி டார்க் ஹெவன்' வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்குப் பார்வையாளர்கள் கொடுத்த ஆதரவுதான் காரணம்.

இத்தனை படங்களுக்கு நடுவில், பெரிய நட்சத்திர நடிகர் நடித்த படங்களை மட்டுமே பார்ப்போம் என்றிருக்கிற சூழலில், இந்தப் படத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றி அபூர்வமானது.

இந்தப் படம் எழுபது சதவீதம் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், இதில் நடித்துவந்த நாயக நடிகர் தொடர்ந்து ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை.

அப்படியொரு இக்கட்டான நிலையில், எடுத்த படத்தை அப்படியே தூக்கி வைத்துவிட்டார்கள். பிறகு சித்துவை நம்பிக் களமிறங்கி முழுப் படத்தை ஒரே மூச்சில் முடித்து வெளியிட்டு ஜெயித்திருக்கிறார்கள்.

அந்தத் துணிச்சலான முடிவுக்குப் பலன் கிடைத்துவிட்டது. நாயகனாக சித்துவின் நடிப்பு பிரமிப்பாக இருக்கிறது. இதுபோன்ற சிறு படங்களுக்குத் திரையரங்கு உரிமையாளர்கள் சில நாள்கள் காத்திருந்து ஆதரவு தரவேண்டும்” என்றார்.

தி டார்க் ஹெவன்: துணிச்சலான முடிவுக்கு வரவேற்பு!
ஒரு படைப்புக்கு எப்போது பெருமை? | சுட்ட கதை 43

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in