ஆங்கிலேயர் ஆட்​சிக் கால கதையில் ஐஎன்ஏ அதிகாரியாக சசிகுமார்

ஆங்கிலேயர் ஆட்​சிக் கால கதையில் ஐஎன்ஏ அதிகாரியாக சசிகுமார்
Updated on
1 min read

‘யாத்திசை’ தரணி ராசேந்​திரன் அடுத்து இயக்​கும் படத்​தில் சசிகுமார் நாயக​னாக நடித்​துள்​ளார். சேயோன், பவானி, சமுத்திரக்​க​னி, ஷிவ​தா, கிஷோர் உள்​ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். அசோக் செல்​வன் சிறப்பு தோற்​றத்​தில் நடித்திருக்கிறார்.

ஜே.கமலக்​கண்​ணனின் ஜே.கே.ஃபிலிம் இன்​டர்​நேஷனல் தயாரிக்​கும் இப்​படத்​துக்கு சேது முரு​கவேல் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். சார்​தக் கல்​யாணி இசையமைத்​துள்​ளார். “பிரிட்​டிஷ் ஆட்சி காலத்​தைப் பின்​னணி​யாகக் கொண்டு உரு​வாகி​யுள்ள இப்​படத்​தில் சசிகு​மார் இந்திய தேசிய ராணுவ (ஐஎன்ஏ) அதிகாரியாக நடித்​துள்​ளார். பீரியட் படம் என்​ப​தால் கதையை மேலும் செழு​மைப்​படுத்​த பிரம்​மாண்​ட​மான விஎப்​எக்​ஸ்​ காட்சிகள்​ இடம்​பெறுகின்​றன. படப்​பிடிப்​பு நிறைவடைந்​து விட்​டது. ​போஸ்ட் புரொடக் ஷன் நடந்து வருகின்றன” என்றது படக்குழு.

ஆங்கிலேயர் ஆட்​சிக் கால கதையில் ஐஎன்ஏ அதிகாரியாக சசிகுமார்
Su from So: பானுவுக்காக ‘மனமிறங்கிய’ சோமேஸ்வர சுலோச்சனா | திரை தேவதைகள் 18

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in