சந்தானத்தின் ‘லவ் பைட்’ படப்பிடிப்பு நிறைவு

சந்தானத்தின் ‘லவ் பைட்’ படப்பிடிப்பு நிறைவு
Updated on: 
1 min read

சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் ‘லவ் பைட்’ படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதாகவும், படம் டிசம்பரில் திரைக்கு வரும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

இந்த தகவலை ஏஜிஎஸ் நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்தப் பதிவில், ‘‘லவ் பைட்’ படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. படம் இந்த டிசம்பர் மாதம் வெளியாகும்’ எனத் தெரிவித்துள்ளது. அத்துடன் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினருடன் நடிகர் சந்தானம் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளது.

கதாநாயகனாக சந்தானம் நடித்திருக்கும் இந்தப் படத்தை  ‘காஞ்ஜுரிங் கண்ணப்பன்’ படத்தினை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் இயக்கி உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சந்தானத்துடன் அபர்ணா தாஸ், ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘லவ் பைட்’ படத்துக்கு இசை டியோ ஃபாக்ஸன் (பிரதீப் பி.ஜே. வேய்ன் பேவி). படத்தின் ஒளிப்பதிவை எஸ்.யுவாவும், படத்தொகுப்பை பிரதீப் ராகவ்வும் மேற்கொண்டுள்ளனர்.

சந்தானத்தின் ‘லவ் பைட்’ படப்பிடிப்பு நிறைவு
பாரதிராஜா நடித்த ‘புலவர்’ ட்ரெய்லர் எப்படி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in