

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோ-பிக்கில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.
உலகளவில் பிரபலமான கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக் கலைஞர் இவர்தான். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படமொன்றை உருவாக்க இருக்கிறார்கள். இதனை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோ-பிக்கை இயக்குநர் கெளதம் தின்னூரி இயக்கவுள்ளார். இவர் ‘ஜெர்சி’, ‘மல்லி ராவா’ மற்றும் ‘கிங்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். சாய் பல்லவியும் சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் அனைத்தும் முடிவானவுடன் முறையாக அறிவிக்கவுள்ளது படக்குழு. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான ‘தண்டேல்’ படத்தில் நாயகியாக நடித்தவர் சாய் பல்லவி. அந்த நட்பின் மூலம் எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோப்பிக்கிலும் நடிக்க அணுகியிருக்கிறார்கள்.