எஸ்.ஜானகி மறைவு: முழு அரசு மரியாதையுடன் மைசூருவில் இன்று இறுதிச் சடங்கு

எஸ்.ஜானகி மறைவு: முழு அரசு மரியாதையுடன் மைசூருவில் இன்று இறுதிச் சடங்கு
Updated on
1 min read

மைசூரு: இந்திய திரையுலகின் மகத்தான பாடகராக அறியப்படும் எஸ்.ஜானகி, நேற்று காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று மைசூருவில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இசைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது உடல் மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது இறுதி சடங்கு மைசூரு நகரை அடுத்துள்ள கனியனஹுண்டி கிராமத்தில் அமைந்துள்ள தோட்டத்தில் நடைபெறுகிறது.

அதற்கான பணிகளை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த பணிகளை கர்நாடக அமைச்சர் யதிந்திரா சித்தராமையா கவனித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக மைசூரு நகரை ஒட்டியுள்ள பண்ணை வீட்டில் எஸ்.ஜானகி வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மைசூருவில் நினைவகம்

இதற்கிடையே மைசூருவில் பாடகர் எஸ்.ஜானகி நினைவாக நினைவகம் அமைக்க வேண்டுமென இசையமைப்பாளர் ஹம்சலேகா வேண்டுகோள் வைத்துள்ளார். நீண்ட வரிசையில் காத்திருந்து மறைந்த எஸ்.ஜானகியின் உடலுக்கு பொது மக்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

எஸ்.ஜானகி மறைவு: முழு அரசு மரியாதையுடன் மைசூருவில் இன்று இறுதிச் சடங்கு
ஆல்வரேஸ் ஸ்பெஷல் கோல்: காலிறுதியில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது அர்ஜெண்டினா | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in