‘ஜனநாயகன்’ ரிலீஸ் எப்போது? - கனடா விநியோகஸ்தரின் அறிவிப்பால் குழப்பம்

‘ஜனநாயகன்’ ரிலீஸ் எப்போது? - கனடா விநியோகஸ்தரின் அறிவிப்பால் குழப்பம்
Updated on
1 min read

‘ஜனநாயகன்’ வெளியீடு தொடர்பாக கனடா விநியோகஸ்தரின் அறிவிப்பால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் எப்போது வெளியீடு என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போது மறுதணிக்கைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் அதிகாரிகள் படத்தினை பார்த்துவிட்டால், பிப்ரவரி 20-ம் தேதி வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளது படக்குழு. ஆனால், அந்தப் பணிகள் முடிவடைந்துவிடுமா என்பது கேள்விக்குறி தான்.

இதனிடையே, கனடா நாட்டில் ‘ஜனநாயகன்’ படத்தினை வெளியிடும் யோர்க் சினிமாஸ் அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ”ஏப்ரல் 30-ம் தேதிக்கு முன்பு ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு இல்லை. ஆகையால், டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் அவற்றை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏப்ரல் 30-ம் தேதி வரை படத்தின் வெளியீடு இல்லை என்பது உறுதியாகி இருப்பதாக தெரிகிறது.

இந்த அறிவிப்பினால் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு தான் ‘ஜனநாயகன்’ வெளியீடா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், இதுவரை தமிழக விநியோகஸ்தர்களுக்கு ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in