வரலாற்​றுக் கதை​யில் ரம்யா கிருஷ்ணன்

வரலாற்​றுக் கதை​யில் ரம்யா கிருஷ்ணன்
Updated on
1 min read

பிரிட்​டிஷ் ஆட்​சிக் காலத்​தில் நடக்​கும் வரலாற்று ஆக் ஷன் டிராமா​வாக ‘டேவிட் ரெட்டி’ என்ற திரைப்​படம் உரு​வாகிறது. 1897 முதல் 1920-கள் வரையி​லான கால​கட்​டத்தை மைய​மாக வைத்து உரு​வாகும் இப்​படத்​தில், மோகன் பாபு​வின் மகன் மனோஜ் மன்சு நாயக​னாக நடிக்​கிறார். உக்​ரைன் நடிகை மரியா ரியா​போஷப்கா கதா​நாயகி​யாக நடிக்​கிறார். ஹனுமா ரெட்டி இயக்கும் இப்​படம், தெலுங்​கு, தமிழ், இந்​தி, மலையாளம், கன்னட மொழிகளில் உரு​வாகி வரு​கிறது.

வெல்​வட் சோல் மோஷன் பிக்​சர்ஸ் மற்​றும் ட்ரூ ராடிக்ஸ் நிறுவனம் தயாரிக்​கும் இப்​படத்​தில் ரம்யா கிருஷ்ணன், கமலா ரெட்டி என்ற ஆக்​ரோஷ​மான கதா​பாத்​திரத்​தில் நடிக்​கிறார். அவருடைய தோற்​றத்தை சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டுள்ள படத்​தின் ஹீரோ மனோஜ் மன்​சு, “உங்​களு​டன் இணைந்து திரையைப் பகிர்ந்து கொள்​வது எனக்கு கிடைத்த மிகப்​பெரிய கவுர​வம்” என்று புகழ்ந்​துள்​ளார். கையில் வாளு​டன் ஆவேச​மாக அமர்​ந்​திருக்​கும் அந்த போஸ்​டர் சமூக வலைதளங்​களில் வைரலானது.

வரலாற்​றுக் கதை​யில் ரம்யா கிருஷ்ணன்
Sarvam Maya: டெலுலுவின் துணையும், ஆன்மாக்கள் தரும் ஆறுதலும் | திரை தேவதைகள் 35

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in