‘வேலையை நேசி, கற்றுக்​கொண்டே இரு’ - ஸ்ரேயாவுக்கு ரஜினி சொன்ன அட்வைஸ்

‘வேலையை நேசி, கற்றுக்​கொண்டே இரு’ - ஸ்ரேயாவுக்கு ரஜினி சொன்ன அட்வைஸ்
Updated on
1 min read

‘சி​வாஜி’ திரைப்​படத்​தில் ரஜினி​காந்​துடன் பணி​யாற்​றிய அனுபவம் குறித்து ஸ்ரேயா சரண் சமீபத்​தில் பேட்​டி​ அளித்​துள்ளார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: ரஜினி சாரை நேரில் பார்த்​த​போது பிரமிப்​படைந்​தேன். அவருடன் பணி​யாற்​று​வது அதுவே முதல் முறை என்​ப​தால், பதற்​றத்​தில் உறைந்​து​விடு​வேனோ என்று பயந்​தேன்.

அதனால் ஒத்​தி​கைக்கு முன்​பாக என்னை அவருக்கு அறி​முகப்​படுத்தி வைக்க ஷங்​கர் சாரிடம் கேட்​டுக் கொண்​டேன். அதைக் கேட்டு அவர் சிரித்​தார். அந்​தப் படம் குறித்த விவரங்​கள் அனைத்​தும் ரகசி​ய​மாகவே வைக்​கப்​பட்​டிருந்​த​தால் அதில் யார் இருக்​கிறார்​கள் அல்​லது என்ன நடக்​கிறது என்​பது பற்றி முதலில் எனக்கு எது​வும் தெரி​யாது.

அப்​போது ஷங்​கர் சார், ‘ரஜினி சாரை சந்​தி​யுங்​கள்’ என்று சொன்​னதைக் கேட்​டதும் ஆச்​சரியப்​பட்​டேன். அந்த நேரத்​தில் ‘வாஜி வாஜி’ பாடலுக்​கான ஒத்​தி​கை​யும் படப்​பிடிப்​பும் நடந்து கொண்​டிருந்​தன. படப்​பிடிப்​பின்​போது, ரஜினி சார் என்னை இயல்​பாக உணர வைத்​தார்.

என் நெருங்​கிய நண்​பரைப் போலவே என்​னிடம் பழகி​னார். அதில் மிக​வும் சுவாரஸ்​ய​மான மனிதர்​களு​டன் பணி​யாற்​றும் வாய்ப்பு கிடைத்​தது என் அதிர்​ஷ்டம். ரஜினி சார் மிக மிக எளிமை​யானவர். படப்​பிடிப்​புத் தளத்​துக்கு வரும்​போது, எல்​லோரை​யும் சமமாகத்​தான் நடத்​து​வார்.

அவருடன் அந்​தப் படத்​தில் பணி​யாற்​றியது எனக்கு சிறந்த அனுபவ​மாக இருந்​தது. ஆனால் அவர் ஏற்​கெனவே சூப்​பர்ஸ்டார். ‘உன் வேலையை நேசி, தொடர்ந்து கற்​றுக்​கொண்டே இரு’ என்று அவர் எப்​போதும் என்​னிடம் சொல்​வார்.

மிக​வும் சிரமப்​பட்டு திரைப்​படக் கல்​லூரி​யில் சேர்ந்​த​தாக அவர் என்​னிடம் கூறி​னார். சாதாரண நிலை​யில் இருந்து இவ்​வளவு பெரிய சூப்​பர் ஸ்டா​ராக உயர்ந்த பிறகும் எளிமை​யாக​வும் பணி​வாக​வும் இருக்​கிறார் என்​ப​தைப் பார்ப்​பது ஊக்​கமளிப்​ப​தாக இருந்​தது. அவருக்​குச் சிறந்த நகைச்​சுவை உணர்​வும் உண்​டு, படப்​பிடிப்​புத் தளத்​தில் அவ்​வப்​போது நாடகத்​தன​மான செயல்​களை​யும் செய்து கொண்​டிருப்​பார்​. இவ்​வாறு ஸ்ரே​யா கூறி​னார்​.

‘வேலையை நேசி, கற்றுக்​கொண்டே இரு’ - ஸ்ரேயாவுக்கு ரஜினி சொன்ன அட்வைஸ்
யுவன் சங்கர் ராஜா இசையில் ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ டீசர் வெளியீடு!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in