திரைத் தெறிப்புகள்: ரஹ்மான் ராஜ்ஜியம் முதல் ஜீவன் ரீ-என்ட்ரி வரை

திரைத் தெறிப்புகள்: ரஹ்மான் ராஜ்ஜியம் முதல் ஜீவன் ரீ-என்ட்ரி வரை
Updated on
2 min read

ரூ.85 கோடிக்கு விற்பனையான ரஹ்மான் பட ஆடியோ உரிமை முதல் மீண்டும் சினிமாவுக்கு வரும் ஜீவன் வரை இன்றைய திரைத் தெறிப்புகள்

> நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'ராமாயணா' படத்தின் ஆடியோ உரிமை ரூ.85 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கும் இப்படத்தின் ஆடியோ உரிமை, 'ஜவான்' படத்தின் ரூ.30 கோடி சாதனையை முறியடித்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

> ரூ.46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்துவிட்டதாக நடிகை அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரது தங்கையும் நடிகையுமான ராதா பரபரப்புப் புகார் அளித்துள்ளார்.

> சமூகத்தின் அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து, தனி ஒரு போராளியாக ரத்தச் சகதியில் நின்று களம் காணும் அஞ்சாத ஒரு பழங்குடிப் பெண்ணாக ராஷ்மிகா மந்தனாவின் அசத்தும் ‘மைசா’ படத்தின் டீசர் வெளியாகி பார்வையாளர்களை மிரட்டி வருகிறது.

> ஃபகத் ஃபாசில் நாயகனாக நடித்துள்ள 'டோன்ட் டிரபிள் தி டிரபிள்' படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகிறது. மாயாஜாலம் கலந்த ஃபேன்டஸி கதைக் களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மேஜிக் நிபுணராக ஃபகத் நடித்துள்ளார். ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ள இப்படம் தமிழ் உள்ளிட்ட 3 மொழிகளில் அக்டோபர் 2-ல் வெளியாகிறது.

> முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தில் அதிரடியான குத்தாட்டப் பாடல் ஒன்றை வைத்துள்ளார். அந்தப் பாடலுக்கு நடிகை கேத்ரின் தெரசா, படத்தின் நாயகன் நடிகர் சந்தீப் கிஷனுடன் ஆடியிருக்கிறார்.

> 24 மணி நேர பார்சிலோனா சர்வதேச கார் பந்தயத்தில் (24H Barcelona) நடிகர் அஜித் குமாரும் அவரது பந்தய அணியினரும் 19-ம் தேதி கலந்து கொண்டனர். ஒட்டுமொத்தப் போட்டியில் (Overall field) இவர்களது அணி 5-வது இடத்தையும், கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப்பில் (Constructors Championship) பிரிவில் 3-வது இடத்தையும் கைப்பற்றியது.

> இளையராஜா இசையில் இலங்கையில் தயாரான தமிழ் படமான ‘அந்தோணி’ இலங்கையின் சார்பில் ஆஸ்கருக்கு அனுப்ப அந்நாட்டுத் தேர்வு குழு பரிந்துரைத்துள்ளது. இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வியலை இப்படம் பேசுகிறது. இந்தியாவின் சார்பிலும் இசைஞானி இசையமைத்த மராத்தி மொழி படமான ‘கோந்தல்’ ஆஸ்கருக்கு பரிதுரைக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

> கொளத்தூரில் மு.க.ஸ்டாலினும், மதுரை மத்தியில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் தோற்றது அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் தேர்தலில் தோற்றார்களா அல்லது தோற்கடிக்கப் பட்டார்களா? எஸ்ஐஆர் நடைமுறைகளின் தாக்கம் இவர்களின் தோல்வியில் உள்ளதா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

> சூர்யா - ஜோதிகாவின் ‘காக்க காக்க’ படத்தில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் நாயகனாக உயர்ந்தவர் ஜீவன்.‘நான் அவன் இல்லை’ படத்தில் தனி முத்திரை பதித்த ஜீவன், மீண்டும் ‘லவ்வர் பாய்’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இதில் நாயகியாக நடிக்கிறார் கீர்த்தி ஷெட்டி.

திரைத் தெறிப்புகள்: ரஹ்மான் ராஜ்ஜியம் முதல் ஜீவன் ரீ-என்ட்ரி வரை
‘டோரதி’ முதல் ‘தி பாரடைஸ்’ வரை: இந்த வார தியேட்டர் ரிலீஸ் பட்டியல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in